| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 171031b ii d00 0 tam d |
| 040 | : | _ _ |a IN-ChTVA |d IN-ChTVA |
| 245 | : | _ _ |a தாமரைத் தடாகம், பூப்பறிப்பவர்கள், எருமை, யானை, மீன்கள், அன்னப்பறவை, நாட்டிய மகளிர், பாண்டிய மன்னர், அலங்கார கூறுகள் மற்றும் சமண ஓவியங்கள் |b1 : |b2 = |
| 300 | : | _ _ |a சுவரோவியம் |
| 500 | : | _ _ |a சித்தன்னவாசல் மலையில் மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள குடைவரையின் கருவறை மற்றும் முன் மண்டப விதானங்கள், தூண்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. நடனப் பெண்கள் இருவரது ஓவியங்கள் இரண்டு தூண்களில் வரையப்பட்டுள்ளன. மற்றொரு தூணில் ஒரு அரசனும் அவனது துணைவியும் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளனர். முன் மண்டப விதானத்தில் பெரிய தாமரைத் தடாகம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் மீன்கள், அன்னப்பறவை, வாத்து, யானை, எருமை போன்றவை மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. இவற்றுடன் தாமரை மற்றும் அல்லி மலர்களை மூவர் பறித்துச் செல்கின்றனர். இவ்வோவியம் குறித்து அறிஞர்களிடம் பல்வேறு கருத்து உள்ளது. பேராசிரியர் ஷாவோ துப்ராய் இவ்வோவியத்தை சமண சமயக் காட்சியாக இருக்கலாம் எனக் கருதுகின்றார். மகாவீரரின் தாய் கருவுற்றிருக்கும் போது 14 நல்நிமித்தங்களைக் கண்டுள்ளார். அவற்றில் ஒன்று தாமரைத் தடாகம், அதில் மீன்கள், விலங்குகள், பறவைகள், மலர்கள் இருந்ததாக கூறப்படுகின்றது. ஆகையால் இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ள தாமரைத் தடாகம் மேற்குறிப்பிடப்பட்ட தாமரைத் தடாகத்தை குறிப்பதாக இருக்கலாம் என எஸ். ஆர். பாலசுப்பிரமணியம் கூறுகின்றார். தி.நா. இராமச்சந்திரன் இக்காட்சியை மகாவீரர் அறம் போதிக்கும் சமவசரணம் நிகழ்வாக இருக்கலாம் என கருதுகின்றார். அதே சமயம், சித்தன்னவாசலுக்கு அருகே இன்றளவும் பல தாமரைத் தடாகங்கள் பயன்பாட்டில் உள்ளன. ஆகையால், மண்டபத்தை அழகுபடுத்த வரையப்பட்ட இயற்கைக் காட்சியாகக் கூட இருக்க வாய்ப்புண்டு. இவ்வோவியங்கள் பல்லவர் கால ஓவியங்கள் என கருதப்பட்ட நிலையில் அங்கு காணப்பட்ட கல்வெட்டுகள் மூலம் அவை பாண்டியர் காலத்து ஓவியங்களாக அறியப்படுகின்றன. இக்கல்வெட்டு 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டிய மன்னன் அவநீபசேகரன் என்னும் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லவன் என்பவன் காலத்தில் எழுதப்பட்டதாக கருதுகின்றனர். இவரது சம காலத்தில் வாழ்ந்த மதுரையைச் சார்ந்த சமணத் துறவி இளங்கெளதமன் என்பவரால் இக் குடைவரையின் மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டதாக அறிய முடிகிறது. இவ்வோவியங்களும் அச்சமயத்தில் உருவாகி இருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். |
| 510 | : | _ _ |a
|
| 520 | : | 3_ |a பல்லவர்களுக்கு நிகராக பாண்டியர்களும் குடைவரைகள் மற்றும் கட்டுமானக் கோயில்களில் ஓவியங்களை தென் தமிழகத்தில் வரைந்துள்ளனர். பெரும்பாலான ஓவியங்கள் அழிந்த நிலையில் சித்தன்னவாசலில் மட்டும் சில ஓவியங்கள் நல்ல நிலையில் உள்ளன. இவ்வோவியங்கள், அஜந்தா, பனைமலை, காஞ்சி கைலாசநாதர் கோயில்களில் உள்ள ஓவியங்களை ஒத்த நிலையில் உள்ளன. |
| 653 | : | _ _ |a பாண்டியர், சித்தன்னவாசல், சமணம், மகாவீரர், ஓவியம், தாமரை, தடாகம், மதுரை, புதுக்கோட்டை, இளங்கவுதமன் |
| 700 | : | _ _ |a க.த. காந்திராஜன் |
| 710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 752 | : | _ _ |a சித்தன்னவாசல் |b # |c சித்தன்னவாசல் |d புதுக்கோட்டை |f குளத்தூர் |
| 850 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக் கழகம் |
| 914 | : | _ _ |a 10.4665376 |
| 915 | : | _ _ |a 78.7334502 |
| 995 | : | _ _ |a TVA_PNT_00049 |
| barcode | : | TVA_PNT_00049 |
| book category | : | சுவரோவியங்கள் |
| cover | : |
|
| Primary File | : |